வார ராசிபலன் 07.07.2024 முதல் 13.07.2024 வரை


Weekly Rasi Palan
x
தினத்தந்தி 7 July 2024 6:37 AM IST (Updated: 7 July 2024 6:40 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:

மேஷம்

எதிர்பாராத புதிய வாய்ப்புகள் வந்து கதவை தட்டும் காலகட்டம் இது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில் துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். ஒரு சிலருக்கு புதிய வண்டி, வாகனம், அசையா சொத்து ஆகியவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பெண்மணிகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட், தகவல் தொடர்பு ஆகிய துறையினருக்கு இது ஆதாயம் தரும் வாரம். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் உதவிகரமாக இருப்பார்கள். மகிழ்ச்சியான பல சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வார இறுதியில் இரவு பயணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்

எதிர்பார்த்த பல நல்ல செய்திகள் இந்த வாரம் உங்களை வந்து சேரும். தொழில் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். வியாபாரிகள், ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்ட லாபத்தை பெறுவார்கள். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். கலைத்துறையினர் விரும்பிய வாய்ப்புகளை பெறுவார்கள். உடல் நலனில் வழக்கத்தைவிட கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். இரவுப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், வெளிவட்டார பழக்கவழக்கங்களில் மன அழுத்தம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்

எதிர்பார்த்த பண வரவை தருகின்ற வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். இல்லத்தரசிகள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். என்ஜினியரிங், ரியல் எஸ்டேட், வங்கி ஆகிய துறையில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் காலகட்டம் இது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். வங்கி கடன் கேட்டவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பலர் புதிய தொழில்களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய வாரம் இது.

கடகம்

மனதிற்கு இனிமை தரும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், தொழில் துறையினர், வியாபாரிகள், கலைத்துறையினர் ஆகிய அனைத்து பிரிவினருக்கும் புதிய வாய்ப்புகளும் நம்பிக்கையும் உருவாகும் காலகட்டம். மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். பெண்மணிகள், உறவினர்களின் சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். விவசாயத் துறையினருக்கு ஏற்றம் தரும் காலகட்டம் இது. புதிய நண்பர்களின் தொடர்பினால் மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.

சிம்மம்

சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடையும் காலகட்டம் இது. வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், தொழில் துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அனைத்து தரப்பினரும் காரிய வெற்றி ஏற்படும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். வாழ்க்கை துணை மற்றும் உறவினர்கள் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசிவிடக்கூடாது. ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெற்று ஆதாயம் அடைவார்கள். இல்லத்தரசிகள் குடும்ப சுப காரியங்களை முன் நின்று நடத்துவார்கள். ஒரு சிலர் சமூகப் பொறுப்புள்ள காரியங்களில் ஈடுபட்டு பிரபலம் அடைவார்கள்.

கன்னி

எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நல்லபடியாக நடந்தேறும் வாரம் இது. முடிந்தவரை இரவு பயணங்களை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். சிலர் புதிய முதலீடுகளை செய்யும் வாய்ப்பு உருவாகும். இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்தவர்கள் அதைப் பெறுவார்கள். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான பணவரவு ஏற்படும். ஒரு சிலர் சிறு வயது நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்வார்கள்.

துலாம்

எதையும் துல்லியமாக திட்டமிட்டு செய்ய வேண்டிய காலகட்டம் இது. தொழில் துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் சூழல் ஏற்படும். ஒரு சிலருக்கு பணியிட மாற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு தொழில் போட்டிகளால் வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஆகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் எதிர்பார்த்த ஆதாயத்தை தரும். பெண்மணிகள் தங்களுடைய பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கடனாகவோ, கைமாற்றாகவோ கேட்ட பணம் கிடைக்கும். விவசாயத்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள்.

விருச்சிகம்

நல்ல காரியங்களில் முன்னின்று ஈடுபடும் வாரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் துறையினர், வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயத்துறையில் உள்ள சிலருக்கு புதிய நில புலன்களை வாங்குவதற்கான யோகம் உண்டு. செய்யும் முயற்சிகள் இந்த காலகட்டத்தில் வெற்றிகளை தரும். அசையா சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவதை ஓரிரு வாரங்களுக்கு தள்ளி வைக்கவும். குடியிருக்கும் வீடுகளுக்கு மராமத்து பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். அரசாங்க காரியங்களில் எதிர்பாராத தடைகள் ஏற்படும்.

தனுசு

மன அழுத்தம் விலகி மகிழ்ச்சி ஏற்படும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் வேறொரு பணியில் சேருவதோ அல்லது இடமாற்றமோ கிடைக்கப் பெறுவார்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதுடன், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் ஏற்படும். குடும்ப உறவுகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் துணிகர முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். வார தொடக்கத்தில் அலைச்சல் ஏற்படும். காப்பீட்டு துறையினருக்கு இது லாபகரமான வாரம். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இல்லத்தரசிகள் குடும்ப சுப காரியங்களை முன்னின்று நடத்துவார்கள்.

மகரம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சுபச்செய்திகள் வந்து சேரும் வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், கலைத்துறையினர், ஷேர் மார்க்கெட் துறையினர், தகவல் தொடர்பு துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் புதிய வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். எதிர்பார்த்திருந்த பண வரவு ஏற்படும். மனதில் உற்சாகம் பொங்கினாலும் எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும். அமைதியாகவும் செய்ய வேண்டும். பெண்மணிகள் மனதில் உற்சாகம் இருந்தாலும் அமைதியாக செயல்பட வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முறையான கணக்கு வழக்குகளை பின்பற்ற வேண்டும். இந்த வாரத்தில் வெளியூர் பிரயாணங்களை இயன்றவரை தவிர்த்து விடுவதே நல்லது.

கும்பம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பங்கள் இப்போது வீட்டுக் கதவை தட்டும். தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு உழைக்க வேண்டிய காலம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வேறு வேலையை பெறுவார்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாரக்கடைசியில் பல விஷயங்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். அதனால் திட்டமிடாத பிரயாணங்களை தவிர்ப்பதே நல்லது. ஒரு சிலர் புதிய கடன்களை பெற்று பழைய கடன்களை அடைப்பார்கள். திட்டமிட்டு செலவு செய்தாலும் செலவினங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. இருந்தாலும் இல்லத்தரசிகள் குறைந்த அளவாவது சேமித்து விடுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமான பேச்சு மற்றும் செயல் திறனை காட்டி வெற்றி பெற வேண்டிய காலம் இது.

மீனம்

துணிச்சலாகவும், திறமையுடனும் செயல்பட்டு காரிய வெற்றி பெறும் காலம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்களுக்கு ஆதாயம் தரும் வாரம். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வரவும் இருக்கும். மனதில் நல்ல நம்பிக்கைகள் உருவாகும் காலகட்டம் இது. இல்லத்தரசிகள் குடும்ப உறவுகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் எதிர்பார்த்த லாபத்தை தரும். பல இடங்களுக்கும் பயணம் செய்து மனதில் ஒருவித சலிப்பு ஏற்படும். குடியிருக்கும் வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Next Story