இளைஞர்களை பாதிக்கும் மூட்டுவலி


இளைஞர்களை பாதிக்கும் மூட்டுவலி
x

மூட்டு வலி வயதானவர்களைத்தான் பாதிக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

ஜாக்கிங், ரன்னிங் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களும், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் இளைஞர்களும், மூட்டு வலி சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே ஒரு சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் மூட்டுவலி பிரச்சினை தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

* ஆப்பிள் சிடர் வினிகர் மூட்டுவலியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனுடன் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

* இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது. இஞ்சி எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் போதும். நல்ல மாற்றம் தெரியும்.

* இஞ்சியை டீயாகவும் பருகிவரலாம். இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

* இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

* பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகி வரலாம். தொடர்ந்து பருகிவந்தால் மூட்டுவலி பிரச்சினை நிரந்தரமாக நீங்கிவிடும்.

* எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ பருகி வரலாம். இதுவும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியது.


Next Story