ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி


ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி
x

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் மூலம் 374 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கண்காணிப்பு பொறியாளர், தயாரிப்பு அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பொறியாளர், உதவியாளர், மூத்த கணக்காளர், ஜூனியர் கணக்காளர், விற்பனை நிர்வாகி, உதவி அங்காடி அதிகாரி, தொழில்முறை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், வரவேற்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன் உள்பட பல்வேறு பணி இடங்கள் நிரப்பட உள்ளது.

12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 22-4-2023 அன்றைய தேதிப்படி பதவியின் தன்மைக்கேற்ப 27, 30, 35, 40, 50 போன்றவை வயது வரம்புகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-5-2023.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://ncert.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


Next Story