என்.எல்.சி.யில் வேலை


என்.எல்.சி.யில் வேலை
x

என்.எல்.சி. நிறுவனம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி மட்டுமின்றி ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் நிர்வாக பொறியாளர், பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணிப்பிரிவுகளில் 294 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.ஏ. போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

போதிய பணி அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பணியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு 30 முதல் 54 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. தேர்வு முறை, விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-8-2023.


Next Story