ரிசர்வ் வங்கியில் வேலை


ரிசர்வ் வங்கியில் வேலை
x

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் பொது, பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை, புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளில் கிரேடு ‘பி’ பதவிகளில் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. மொத்தம் 291 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-6-2023. https://ibpsonline.ibps.in/rbioapr23/ என்ற இணைய பக்கத்தின் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

1 More update

Next Story