மூளை வளர்கிறது


மூளை வளர்கிறது
x

சில அறிஞர்களின் மூளை வளர்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், பல விசித்திர மாற்றங்களையும் அடைகிறதாம்.

பொதுவாக உடல் உறுப்புகள் இருபது வயதிற்கு மேல் வளர்ச்சியடைவதில்லை. ஆனால் சில அறிஞர்களின் மூளை வளர்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், பல விசித்திர மாற்றங்களையும் அடைகிறதாம்.

சர் ஆர்தர் கீத் என்ற மூளை ஆய்வாளர், பல்லாயிரக்கணக்கான மூளைகளை ஆராய்ந்த பின்னர் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் அரசியல் மேதையான கிளாட்ஸ்டன் பிரதம மந்திரியாக இருந்த போது, அவரது மூளை ஓர் அங்குலம் அளவு வளர்ந்ததாம். அதைப் போன்றே மற்றொரு பிரிட்டிஷ் அரசியல் மேதையான லாயிட் ஜார்ஜின் மூளை வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், உலகப் போர் நடக்கையில் உருமாற்றமும் அடைந்ததாம். பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பிண்டர்ஸ் பிட்ரியின் மூளை 6.5 அங்குலத்திலிருந்து 7.5 அங்குலம் வரை அவருடைய 50-வது வயதில் வளர்ச்சியடைந்ததாம்.

பொதுவாக மூளையின் திறனுக்கும் அதன் அமைப்புக்கும் சம்பந்தமில்லை. பெரிய மூளையாக இருந்தால் அதிக திறனிருக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல. திறனுள்ள மூளை என்பது, அதில் படிந்துள்ள பள்ளங்கள், மேடுகள், மற்றும் வீக்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைவதேயாகும்.

''சில அறிஞர்களின் மூளை விசித்திரமாக வளர்வதற்கு இந்த வீக்கங்களும் மேடுகளுமே காரணம்'' என்கிறார் ஆர்தர் கீத்.

சராசரியாக ஒரு ஆணின் மூளை எடை அளவு 1 கிலோ 360 கிராம். பெண்ணின் மூளை 1 கிலோ 250 கிராம்தான். இதற்காக பெண்கள் ஆண்களை விட அறிவாற்றல் குறைந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது.


Next Story