பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து


தினத்தந்தி 26 July 2024 10:41 PM IST (Updated: 27 July 2024 6:03 AM IST)
t-max-icont-min-icon

பாரீசில் உள்ள செய்ன் ஆற்றில் துவக்க விழா அணிவகுப்பு நடைபெற்றது.

பாரீஸ்,

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு விழாவாக உருவான ஒலிம்பிக் போட்டி, ரோமானியர்களின் படையெடுப்புகளால் நசுங்கிப் போனது. அதன் பிறகு பல நூற்றாண்டுகளை கடந்து நவீன ஒலிம்பிக்காக 1896-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது தான் அதிகாரபூர்வ முதலாவது ஒலிம்பிக்காகும்.

அதன் பிறகு ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலக போர் காரணமாக 3 முறை ஒலிம்பிக் போட்டி ரத்தானது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. இந்த தொடரில் முதல் நாளான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் 2ம் நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியாக துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு அமைந்துள்ளது. இதன் தகுதி சுற்று இந்திய நேரப்படி பகல் 12 30 மணிக்கும், இறுதிப்போட்டி மாலை 4 30 மணிக்கும் நடைபெறுகிறது. இதில் இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா, இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்குகிறது.


Live Updates

  • 27 July 2024 3:35 AM IST



  • 27 July 2024 3:25 AM IST

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் முதல் நாளில் போட்டி எதுவும் கிடையாது.

  • ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
    27 July 2024 3:21 AM IST

    ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

    துடுப்பு படகு :- பால்ராஜ் பன்வார் (ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் தகுதி சுற்று), பகல் 12.30 மணி.

    துப்பாக்கி சுடுதல் :- இளவேனில்-சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா-ரமிதா ஜிண்டால் (10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று), பகல் 12.30 மணி, இறுதிசுற்று: மாலை 4 மணி.

    சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா (ஆண்கள் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் தகுதி சுற்று), பிற்பகல் 2 மணி.

    மனு பாகெர், ரிதம் சங்வான் (பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று), மாலை 4 மணி.

    டென்னிஸ்:- ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா)-பேபியன் ரிபோல்-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) (ஆண்கள் இரட்டையர் பிரிவு முதலாவது சுற்று), மாலை 4.30 மணி.

    பேட்மிண்டன்:-லக்‌ஷயா சென் (இந்தியா) -கெவின் கோர்டான் (கவுதமாலா) (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), இரவு 7.10 மணி.

    சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி(இந்தியா)-லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் (பிரான்ஸ்), (ஆண்கள் இரட்டையர் பிரிவு லீக் சுற்று), இரவு 8 மணி.

    அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ (இந்தியா)-கோங் ஹீ யோங்-கிம் சோ யோங் (தென்கொரியா) (பெண்கள் இரட்டையர் லீக் சுற்று), இரவு 11.50 மணி.

    டேபிள் டென்னிஸ்:- ஹர்மீத் தேசாய்(இந்தியா )-ஜாய்த் அபோ யமான் (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), இரவு 7.15 மணி.

    ஆக்கி:- இந்தியா-நியூசிலாந்து (ஆண்கள்) லீக் சுற்று: இரவு 9 மணி

    குத்துச்சண்டை:- பிரீத்தி பவார்(இந்தியா)-வோ தி கிம் அன் (வியட்நாம்), (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று), நள்ளிரவு 12 மணி.

  • 27 July 2024 2:59 AM IST

    ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது பிரான்சின் ஜோதி வீரர்களான ஜூடோகா டெடி ரைனர் மற்றும் ஸ்ப்ரிண்டர் மேரி-ஜோ பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் கொப்பரையை ஏற்றி வைத்தனர்.

  • ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா
    27 July 2024 2:57 AM IST

    ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா

    ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, ​​பிரெஞ்சு முன்னாள் ஸ்ப்ரிண்டர் மேரி-ஜோஸ் பெரெக் மற்றும் பிரெஞ்சு ஜூடோகா டெடி ரைனர் ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏந்திச் சென்றனர்.


Next Story