மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது...!


தினத்தந்தி 15 Jun 2022 10:58 AM IST (Updated: 15 Jun 2022 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட கல்வி குழு பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட கல்வி குழு பங்கேற்றுள்ளனர்.

பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டத்தை வடிவமைப்பது, மாநில மொழி, உரிமைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்றுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story