சினிமா செய்திகள்

டைரக்டருடன் கங்கனா ரணாவத் மோதல் + "||" + With director Gangana Ranawat conflict

டைரக்டருடன் கங்கனா ரணாவத் மோதல்

டைரக்டருடன் கங்கனா ரணாவத் மோதல்
கிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த மணிகர்னிகா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்கும்படி கிரிஷை அணுகியபோது மறுத்து விட்டார். இதனால் கங்கனா ரணாவத்தே இயக்கி படத்தின் இயக்குனர் என்று தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார்.

இதற்கு கிரிஷ் கண்டனம் தெரிவித்தார். “மணிகர்னிகா படத்தை முழுமையாக எடுத்து முடித்து விட்டேன். அதன்பிறகு கங்கனா என்னை தொடர்பு கொண்டு படத்தின் சில கட்சிகளை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றார். நான் மறுத்ததால் அவரே சில காட்சிகளை படமாக்கி விட்டு பெயரையும் போட்டுக்கொண்டார். 400 நாட்கள் படத்துக்காக வேலை பார்த்தேன். படத்தில் இயக்குனர் என்று பெயரை போட்டுக்கொள்ள கங்கனாவுக்கு தகுதி இல்லை” என்று அவர் கூறினார்.


இதற்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
“எதிர்பாராத விதமாக மணிகர்னிகா படத்தை நானும் இயக்க வேண்டி வந்தது. படத்தின் முக்கிய முடிவுகளை நான்தான் எடுத்தேன். கிரிசுக்கு உரிய மரியாதையை கொடுத்துள்ளோம். இந்த படம் மீது அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் தயாரிப்பாளரிடம் சொல்ல வேண்டும். மாறாக என்மீது குற்றம் சாட்டி பேசுவது முறையல்ல. இந்த படத்துக்கு பிறகு எனக்கும் படங்கள் இயக்கும் தகுதி வந்துள்ளது. அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக இயக்குவேன்.” இவ்வாறு அவர் கூறினார்.