30 வயதை தாண்டியும் பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகள்


30 வயதை தாண்டியும் பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகள்
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

நடிகைகள் பட வாய்ப்புக்காக 30 வயதை தாண்டியும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குறையும் என்று கருதி நடிகைகள் சிலர் 30 வயதை தாண்டிய பிறகும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்கள். திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. நடிக்க வந்து 16 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். சமீபத்தில் வந்த 96 படம் நடிப்பு திறமையை பிரதிபலித்தது.

இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். இவருக்கும் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசுத்தனர். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் முடிந்து நடிக்க தடை போட்டதால் திருமணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. இப்போது திருமண எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக நடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு வயது ஆக ஆக மார்க்கெட் உயர்ந்து கொண்டு வருகிறது. தமிழ் பட உலகில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளமும் எந்த தென்னிந்திய நடிகையும் வாங்காத அளவுக்கு ரூ.5 கோடியை எட்டி உள்ளது. இவருக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு முறிந்தது. இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றுகிறார். கைநிறைய படங்கள் இருப்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார்.

அனுஷ்காவுக்கு 37 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜாதகத்தில் தடங்கல் இருப்பதாக கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் நடத்தியும் மாப்பிள்ளை அமையவில்லை. இவருக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தும் உறுதிப்படுத்தாமல் உள்ளனர்.

காஜல் அகர்வாலுக்கு 33 வயது ஆகிறது. இப்போதும் அவருக்கு கைநிறைய படங்கள் உள்ளன. இந்தியன்-2 படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவருடைய தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்தும் இன்னும் காஜல் திருமணத்துக்கு தயாராகாமல் இருக்கிறார். ஏற்கனவே நடிகர் பிரபாசுடனும், மும்பை தொழில் அதிபர் ஒருவருடனும் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.


Next Story