கொரோனாவால் வீட்டில் முடக்கம்: படப்பிடிப்புக்கு செல்வதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன் - நடிகை ராஷ்மிகா
கொரோனாவால் வீட்டில் முடக்கி இருக்கும் நிலையில், படப்பிடிப்புக்கு செல்வதை ஆர்வமாக எதிர்பார்ப்பதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. இவர் தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு பற்றி அவர் கூறியதாவது:-
குடும்பத்தோடு இவ்வளவு நாட்கள் கழித்தது வாழ்க்கையில் இதுதான் முதல்முறை. படப்பிடிப்பில் ஓய்வில்லாமல் இருப்பேன். கொரோனாவால் இப்போது வீட்டில் முடங்கி இருக்கிறேன். எப்போது படப்பிடிப்புக்கு போவேன் என்ற ஆர்வமான எதிர்பார்ப்பில் இருக்கிறேன். நாகரிக உடையை காட்டிலும் அழகும், சவுகரியமும் புடைவையில்தான் இருக்கிறது.
எனது அம்மா-அப்பாவை மிகவும் நேசிக்கிறேன். அவர்களுக்கு சிறிய கஷ்டம் கூட கொடுக்கக் கூடாது என்று நினைப்பேன். சிறிய வயதில் தூங்கும் அப்பா-அம்மாவை எழுப்ப மனம் இல்லாமல், பெல் அடித்தால் அவர்கள் தூக்கம் கெட்டுவிடும் என்று கருதி வீட்டு மாடியில் ஏறி உள்ளே செல்வேன்.
எனது வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இருந்தன. அதை நோக்கித்தான் எனது பயணமும் இருந்தது. நான் எதிர்பார்த்த இடத்தை கண்டிப்பாக அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, சிறிய வயதில் நானும், தோழிகளும் ஒரு மாமரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்குவதை பார்த்தோம். நான் மரத்தில் ஏறி மாங்காயை பறித்துவிட்டு கீழே இறங்குவதற்குள் வீட்டுக்கார பெண், கையில் கம்புடன் வேகமாக வந்தார். நான் கீழே குதித்து தப்பி ஓடினேன். அது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
Related Tags :
Next Story