சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் 3 படங்கள் + "||" + 3 films starring Vijay

விஜய் நடிக்கும் 3 படங்கள்

விஜய் நடிக்கும் 3 படங்கள்
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது.
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பை ரஷியாவில் நடத்துவது என்றும், அக்டோபர் மாதத்துக்குள் முழு படத்தையும் முடித்து அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவது என்றும் திட்டமிட்டு உள்ளனர். விஜய்யின் 66-வது படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம் கோடையில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. 2 படங்களையும் இயக்க சுதா கொங்கரா, மகிழ் திருமேனி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
2. நயன்தாராவின் 3 புதிய படங்கள்
நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தொடர்ந்து நிழல் மலையாள படம் வந்தது.
3. கதாநாயகர்கள் இல்லாமல் நடிகைகளை மையப்படுத்தி தயாராகும் அதிக படங்கள்
தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன.
4. தனுசின் புதிய படங்கள்
தனுஷ் நடித்த கர்ணன், ஜெகமே தந்திரம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
5. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.