நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்


நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்
x
தினத்தந்தி 12 Sep 2021 3:57 PM GMT (Updated: 2021-09-12T21:27:31+05:30)

நகைச்சுவை நடிகை வித்யூலேகா காதல் திருமணம் தொழில் அதிபரை மணந்தார்.

ஜில்லா, வீரம், நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், வித்யூலேகா. இவர், குணச்சித்ர நடிகர் மோகன்ராமின் மகள். வித்யூலேகாவுக்கும், தொழில் அதிபர் சஞ்சய்வாட்வானிக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.

இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. காலையில் இந்து முறைப்படியும், மாலையில் சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் வித்யூலேகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

Next Story