வெப் தொடராக வரும் பொன்னியின் செல்வன்


வெப் தொடராக வரும் பொன்னியின் செல்வன்
x
தினத்தந்தி 12 Sep 2021 11:33 PM GMT (Updated: 2021-09-13T05:03:53+05:30)

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார்.2 பாகங்களாக தயாராகிறது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் கதையை வெப் தொடராக எடுப்பதற்கான பணிகளை தொடங்கி இருப்பதாக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அறிவித்து உள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஒவ்வொரு படைப்புக்கும் பயணமும் இலக்கும் இருக்கிறது. பல தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் சீசன் 1 வெப் தொடரை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடையை திறமையான குழுவினருடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். சவுந்தர்யா ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தையும், தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story