சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ் + "||" + Ajith's 'Strength' released for Pongal

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ்

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ்
அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு படப்பிடிப்பை முடித்து உள்ளனர்.
அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு படப்பிடிப்பை முடித்து உள்ளனர். தற்போது தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது.


தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் வெளியாக உள்ளதால் இரண்டு படங்களின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு பதிலாக டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிப்பதாக இன்னொரு தகவலும் வெளியானது.

அண்ணாத்த படம் வெளியாகும் நாளில் வலிமை படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளிவைக்க யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்தனர். இந்த நிலையில் வலிமை படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் நேற்று டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வலிமை படத்தில் நாயகியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். வினோத் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வரும் அஜித்குமார் தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர். நாங்க வேற மாதிரி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் தோற்றங்கள்
வலிமை திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன . .
2. புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
3. அண்ணாத்த ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது
அண்ணாத்த ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது.
4. ஜோதிகா 50வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. தனுசின் இந்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
நடிகர் தனுஷ் தனது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதை விரும்புவது இல்லை.