சாவி தொலைந்ததால் ஓட்டு பெட்டியை உடைத்த அதிகாரிகள்


சாவி தொலைந்ததால் ஓட்டு பெட்டியை உடைத்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 12 Oct 2021 9:05 PM GMT (Updated: 12 Oct 2021 9:05 PM GMT)

சாவி தொலைந்ததால் ஓட்டு பெட்டியை உடைத்த அதிகாரிகள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. அப்போது முதலில் தபால் ஓட்டுகளை எண்ண ஊழியர்கள் ஓட்டு பெட்டியை தூக்கி வந்தனர்.

அதை திறப்பதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்த வேளையில், பெட்டியை தூக்கி வந்தவர்கள் திடீரென திகைத்தனர். உடனே அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், “ஏன் நிற்கிறீர்கள், பெட்டியை திறக்க வேண்டியது தானே?” என்றனர். பின்புதான். அந்த தபால் வாக்கு பெட்டியின் சாவி தொலைந்து போன விஷயம் தெரியவந்தது..

அங்கும் இங்கும் தேடியும் சாவி கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி தபால் வாக்குகள் இருந்த பெட்டியின் பூட்டை சுத்தியலால் அதிகாரிகள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அதன்பிறகு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

Next Story