"கோபப்பட்டு பாத்தது இல்லையே"... வெளியானது அண்ணாத்த படத்தின் டீசர்


கோபப்பட்டு பாத்தது இல்லையே...  வெளியானது அண்ணாத்த படத்தின் டீசர்
x
தினத்தந்தி 14 Oct 2021 1:45 PM GMT (Updated: 2021-10-14T19:15:37+05:30)

'அண்ணாத்த' படத்தின் டீசரில், நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் பரபரப்பான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை,

விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ரஜினி நடிக்கும்  அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் 'அண்ணாத்த' முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.  படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது .அதே போல் சரியாக மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியானது.

'அண்ணாத்த' படத்தின்  டீசரில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பான சண்டை காட்சிகளில் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"கிராமத்தானை குணமாதான பாத்துருக்க; கோபப்பட்டு பாத்தது இல்லையே" என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம்  டீசரில் இடம் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


Next Story