'பீஸ்ட்' படத்தின் பாடல் புரோமோவிற்கென பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!


பீஸ்ட் படத்தின் பாடல் புரோமோவிற்கென பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!
x
தினத்தந்தி 17 Dec 2021 9:36 AM GMT (Updated: 2021-12-17T15:06:15+05:30)

நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடல் புரோமோ வீடியோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவு பெற்றது. விரைவில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டிற்காக பிரத்யேகமான படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளது படக்குழு. நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளது. 

ஏற்கெனவே, டாக்டர் திரைப்படத்தின் 'ஓ பேபி' பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் நெல்சன் இவ்வாறு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் 2022-ம் ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story