மீண்டும் வில்லன் வேடம்? புதிய படத்தில் நடிக்க தயாராகும் அஜித்


மீண்டும் வில்லன் வேடம்? புதிய படத்தில் நடிக்க தயாராகும் அஜித்
x
தினத்தந்தி 10 Jan 2022 3:48 PM IST (Updated: 10 Jan 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

அஜித் 61 திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அஜித்குமார் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவல், இரவு ஊரடங்கு போன்ற காரணங்களால் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். கொரோனா பரவல் அடங்கிய பிறகு புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். 

இந்த நிலையில் அடுத்த புதிய படத்தில் நடிக்க அஜித் தயாராகி வருகிறார். இது அவருக்கு 61-வது படம். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3-வது தடவையாக வினோத்தே இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். திரைக்கதை எழுதும் பணிகள் முடிந்துள்ளது. 

அதிரடி திகில் கதையம்சத்தில் இந்த படம் தயாராக இருப்பதாகவும் இதில் அஜித்குமார் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வாலி, பில்லா, வரலாறு, மங்காத்தா படங்களில் அஜித் வில்லத்தன வேடங்கள் ஏற்றுள்ளார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அஜித்துடன் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது.

1 More update

Next Story