சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறுகோடி வானவில்' படத்தின் டீசர் வெளியானது..! + "||" + The teaser of the movie 'Noorukodi Vanavil' starring Harish Kalyan has been released ..!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறுகோடி வானவில்' படத்தின் டீசர் வெளியானது..!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறுகோடி வானவில்' படத்தின் டீசர் வெளியானது..!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'நூறுகோடி வானவில்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,

இயக்குனர் சசி தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை சித்தி இத்னானி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஸன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.  'நூறுகோடி வானவில்' என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இன்றைய நவீன காலத்தின் காதல் மற்றும் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹரீஷ் கல்யாண் வினோ என்ற கதாபாத்திரத்திலும் சித்தி இத்னானி பென்னி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத், ரினில், விஜே பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை பாலாஜி கபா மற்றும் அருண் அருணாச்சலம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சித்து குமார் இசையமைக்கிறார்.