சினிமா செய்திகள்

விஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று..! + "||" + Corona infection for Vishal movie actress ..!

விஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று..!

விஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று..!
விஷால் பட நடிகை டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை டிம்பிள் ஹயாத்தி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அனைவருக்கும் வணக்கம், அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிய போதும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது மற்றபடி நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதாலேயே அறிகுறிகள் லேசாக இருக்கிறது. 

அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு முக கவசங்களை அணிந்துகொண்டு, பாதுகாப்போடு இருங்கள். இன்னும் வலிமையோடு மீண்டு வருவேன்' என்று கூறியுள்ளார்.


டிம்பிள் ஹயாத்தி, தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கத்தை கொல்ல முடியாது - வீரமே வாகை சூடும் டிரைலர்
விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
2. விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!
நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
3. விஷாலின்'வீரமே வாகை சூடும் படத்தின்'ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.