மகான் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..!


மகான் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..!
x
தினத்தந்தி 12 Feb 2022 5:56 AM IST (Updated: 12 Feb 2022 5:56 AM IST)
t-max-icont-min-icon

மகான் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாகிவுள்ளது. இந்த திரைப்படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மகான் திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. பலரின் கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மகான் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், 'சிறந்த படம். சிறந்த நடிப்பு. புத்திசாலித்தனமான திரைக்கதை. ஆம் தலைவருக்கு மகான் திரைப்படம் பிடித்திருக்கிறது. உங்கள் அழைப்புக்கு நன்றி தலைவா. உங்களின் பாராட்டால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story