சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டீசர் வெளியானது..!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.
The mass action-packed #ETteaser is out now!
— Sun Pictures (@sunpictures) February 18, 2022
▶ https://t.co/ITAxMlj99C@Suriya_offl@pandiraj_dir#Sathyaraj@immancomposer@RathnaveluDop@priyankaamohan@VinayRai1809@sooriofficial@AntonyLRuben#ET#EtharkkumThunindhavan
Related Tags :
Next Story