உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடிக்கிறார் பகத் பாசில்..!
நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் பகத் பாசில் இணைந்து நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக அவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கிய 'கர்ணன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மாரி செல்வராஜ் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதற்கான முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று பகத் பாசில் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story