அப்டேட்டுடன் வெளியான 'விக்ரம்' படத்தின் புதிய போஸ்டர்..!
'விக்ரம்' திரைப்படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார்.
சென்னை,
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து 'விக்ரம்' திரைப்படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
RKFI and Red Giant Movies will together set TN screens on fire from June 3! #VikramFromJune3#Ulaganayagan#KamalHaasan#Aarambikalangala@ikamalhaasan@Udhaystalin@Dir_Lokesh@RedGiantMovies_@VijaySethuOffl#FahadhFaasil#Mahendran@anirudhofficial@turmericmediaTMpic.twitter.com/pegDkQaOTc
— Raaj Kamal Films International (@RKFI) March 30, 2022
Related Tags :
Next Story