சூர்யா படம் மீண்டும் ஒ.டி.டி.யில் ரிலீசா?


சூர்யா படம் மீண்டும் ஒ.டி.டி.யில் ரிலீசா?
x
தினத்தந்தி 31 March 2022 10:22 AM GMT (Updated: 2022-03-31T15:52:34+05:30)

சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பரிசீலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

சூர்யா நடித்த சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய 2 படங்களும் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டியில் வந்தன. இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பை பெற்றன. ஜெய்பீம் ஆஸ்காருக்கு சென்று விருது பெறாமல் திரும்பியது. தொடர்ந்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தியேட்டர்களில் வெளியிட்டனர். இந்த படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கும் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலா இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வந்த நந்தா, பிதாமகன் படங்கள் பெரிய வெற்றிபெற்றன. 18 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பரிசீலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.


Next Story