விக்ரமின் 62-வது படம்


விக்ரமின் 62-வது படம்
x
தினத்தந்தி 7 April 2022 3:52 PM IST (Updated: 7 April 2022 3:52 PM IST)
t-max-icont-min-icon

விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது விக்ரமுக்கு 61-வது படம். பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், விக்ரம் நடிக்க உள்ள 62-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.


Next Story