பீஸ்ட் படத்துக்கு கத்தாரில் தடை
குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து உள்ளனர். பயங்கரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்து, மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையக உள்ளது.
பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர்., மலையாளத்தில் வந்த குரூப் ஆகிய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து உள்ளனர்.
பயங்கரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story