உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டிரைலர் வெளியீடு..!


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியீடு..!
x
தினத்தந்தி 9 May 2022 10:31 PM IST (Updated: 9 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

Next Story