31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன் - நடிகை ஹன்சிகா


31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன் - நடிகை ஹன்சிகா
x

31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன் என நடிகை ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.

ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்றும் அவர் கூறுவார். அதனால்தான் நான் கதாநாயகி ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டேன். இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

20-ந் தேதி முதல் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட போகிறேன். கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இரண்டு வெப் தொடர்கள் உள்ளன. எனவே நான் மிகவும் பிசி'' என்றார்.

1 More update

Next Story