ஜெயம் ரவியின் 5 படங்கள்


ஜெயம் ரவியின் 5 படங்கள்
x

ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் திரைக்கு வர உள்ளன.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் பூமி படம் வெளியானது. இது அவருக்கு 25-வது படம். கொரோனா பரவலால் தொடர்ந்து ஜெயம் ரவி படங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா அடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்புகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இதனால் அடுத்தடுத்து ஜெயம் ரவியின் 5 படங்கள் திரைக்கு வர உள்ளன. தற்போது அகிலன் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து முடித்துள்ளார். அகிலன் படம் அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. நாயகிகளாக பிரியா பவானிசங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அகமது இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தனி ஒருவன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதுவும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது. டாப்சியுடன் இணைந்து ஜனகன படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. ஹரி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.


Next Story