ஆஸ்கார் விருது வாங்க ரூ.80 கோடி செலவா? 'ஆர் ஆர் ஆர்' படக்குழு விளக்கம்


ஆஸ்கார் விருது வாங்க ரூ.80 கோடி செலவா? ஆர் ஆர் ஆர் படக்குழு விளக்கம்
x

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடித்து வசூல் குவித்த 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிடைத்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்த நிலையில் ரூ.80 கோடி செலவு செய்து விருதை வாங்கி இருப்பதாக வலைத்தளத்தில் விமர்சனங்களும் கிளம்பின.

இதற்கு இயக்குனர் ராஜமவுலியின் மகனும் 'ஆர் ஆர் ஆர்' பட விளம்பர குழுவை சேர்ந்தவருமான கார்த்திகேயா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "சமூக வலைத்தளங்களில் வெளியானதுபோல் ஆஸ்கார் விருதுக்காக பெரிய தொகையை நாங்கள் செலவு செய்யவில்லை. பாடலை விளம்பரப்படுத்தவும் இரண்டு நகரங்களில் சிறப்பு காட்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்தோம்.

ஆஸ்கார் விருது விழாவுக்கு இலவச அனுமதி தவிர மற்ற படக்குழுவினருக்கு ரூ.57 ஆயிரம் முதல் ரூ.1.2 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினோம். நியூயார்க் நகரில் கூடுதலாக சில சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டி இருந்தது. இதற்கெல்லாம் ரூ.5 கோடி செலவு செய்ய திட்டமிட்டோம். ஆனால் அந்த செலவு ரூ.8.5 கோடியாகி விட்டது.

ஆஸ்கார் விருதை விலை கொடுத்து வாங்கினோம் என்பது அபாண்டம். ஆஸ்கார் விருதை விலை கொடுத்து வாங்க முடியாது'' என்றார்.


Next Story