இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் சொல்லும் படம்


இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் சொல்லும் படம்
x

‘வெள்ளி மலை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இதில் சூப்பர் குட் சுப்பிரமணியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை ஓம் விஜய் எழுதி டைரக்டு செய்துள்ளார். அழகான மலை கிராமத்தின் பின்னணியில் இயற்கை மருத்துவத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த கதையம்சத்தில் இந்தப் படம் தயாராகி உள்ளது. சிகிச்சை மருந்துகள் எடுக்காமல் ஒரு இயற்கை மருத்துவரை கேலி செய்யும் மக்களையும் அவர்கள் மனநிலையை மருத்துவர் எப்படி மாற்றுகிறார் என்பதும் கதை. சித்தர்களின் தனித்துவம், நல்ல மருத்துவத்துக்கு அவர்களின் பங்களிப்பு போன்றவையும் படத்தில் இருக்கும். சமூக அக்கறை கொண்ட படமாக தயாராகிறது. ஒளிப்பதிவு: மணிபெருமாள், இசை: என்.ஆர்.ரகுநாதன்.


Next Story