கவர்ச்சியிலும் கலக்கும் பாடகி


கவர்ச்சியிலும் கலக்கும் பாடகி
x

பாடகி ஜொனிதா காந்தி கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம் பிடித்து விடுபவர் ஜொனிதா காந்தி. இவர் தமிழில் 'காப்பான்' படத்தில் 'ஹே ஹமிகோ...', 'காற்று வெளியிடை' படத்தில் 'அழகியே...', 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா... செல்லம்மா...', 'பீஸ்ட்' படத்தில் 'அரபி குத்து' உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

பாடகியாக இருந்த அவருக்கு படவாய்ப்பும் வந்திருக்கிறது. இந்தியில் விநாயக் இயக்கும் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்' என்ற படத்தில் கிருஷ்ணகுமாருக்கு (சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக சைதன்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்) ஜோடியாக நடித்து வருகிறார். காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜொனிதா காந்தி கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். அவரது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறது. கதாநாயகியாக நடிக்க தொடங்கியவுடனே கவர்ச்சி பாதையில் கால்பதித்துள்ளார், ஜொனிதா காந்தி.


Next Story