மூன்று 'கான்'களும் சேர்ந்து நடிக்க இதுவே சரியான நேரம்... பிறந்தநாள் விழாவில் மனம் திறந்த அமீர் கான்


மூன்று கான்களும் சேர்ந்து நடிக்க இதுவே சரியான நேரம்... பிறந்தநாள் விழாவில் மனம் திறந்த அமீர் கான்
x

சமீபத்தில் ஆனந்த் அம்பானி வீட்டு திருமணக் கொண்டாட்டத்தில் மூன்று கான்களும் இணைந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என மூன்று கான்களும் எப்போது இணைந்து படம் நடிப்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு "நாங்கள் மூன்று பேரும் இணைந்து படம் செய்வோம். அதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்" என நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதற்காக இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதற்காகத் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க சமூகவலைதளப்பக்கத்தில் இரவு லைவ் வந்தார் அமீர்கான். அவரிடம் ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதில் ஒருவர், 'ஷாருக் கான், சல்மான் கான் நீங்கள் என மூன்று கான்களும் எப்போது ஒன்றாக இணைந்து படம் நடிப்பீர்கள்?' எனக் கேட்டார்.

இந்த கேள்விக்கு அமீர்கான், "எங்களுக்கும் அந்த ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அதற்கான கதையையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். இதுகுறித்து நாங்களும் பலமுறை பேசியிருக்கிறோம். என்னுடைய விருப்பமும் அதுதான்" எனக் கூறியிருக்கிறார் அமீர்கான்.

சமீபத்தில் ஆனந்த் அம்பானி வீட்டு திருமணக் கொண்டாட்டத்தில் மூன்று கான்களும் இணைந்து 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு முன்பு சல்மான்கான் - அமீர்கான், சல்மான்கான் - ஷாருக்கான் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனால் மூன்று பேரும் இணைந்து நடித்ததில்லை.


Next Story
  • chat