வேளச்சேரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் 'அபேஸ்'


வேளச்சேரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 5 April 2023 4:14 AM GMT (Updated: 5 April 2023 4:35 AM GMT)

வேளச்சேரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 53). இவர் வேளச்சேரி, காந்திநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அவசர தேவைக்காக ரூ.5 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு காந்திநகர் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் ஏறி விஜயநகர் சந்திப்பில் இறங்கினார். பஸ் கூட்டமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி கீழே இறங்கிய வசந்தி, தோள் பையை சரிபார்க்கும்போது, ஜிப் திறந்திருந்ததை கண்டு பதறினார். பின்னர் அதில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story