நடிகர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான ரவி கிஷன் மீது இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு


நடிகர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான ரவி கிஷன் மீது இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
x

நான் ரவி கிஷனின் 2-வது மனைவி. எங்கள் இருவருக்கும் ஷின்னோவா என்ற பெண் குழந்தை உள்ளது என்று கூறி அபர்ணா என்ற பெண் சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

புனே,

போஜ்புரி பட நடிகராக இருந்து அரசியலில் இணைந்தவர் ரவி கிஷன். கோரக்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பா.ஜ.க. சார்பில் கோரக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இவருக்கு எதிராக அபர்ணா தாக்குர் என்ற பெண், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, நான் ரவி கிஷனின் 2-வது மனைவி. எங்கள் இருவருக்கும் ஷின்னோவா என்ற பெண் குழந்தை உள்ளது என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

எனினும், இதற்கு ரவி கிஷனின் மனைவி பிரீத்தி மறுப்பு தெரிவித்ததுடன், அபர்ணாவின் கணவர் பெயர் ராஜேஷ் சோனி என்றும், வரவுள்ள மக்களவை தேர்தலில், தன்னுடைய கணவரை குற்ற வழக்குகளில் பொய்யாக சிக்க வைப்பதற்கான வேலையில் அபர்ணா ஈடுபடுகிறார் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அபர்ணாவின் மகள் ஷின்னோவா நடிகையாகவும் இருந்து வருகிறார். அவர், மும்பை கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ரவி கிஷன் தன்னுடைய உண்மையான தந்தை என்றும், இந்த வழக்கில் மரபணு பரிசோதனை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தன்னுடைய தாயாருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை ரத்து செய்யும்படியும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த விசயத்தில் தன்னையும், தன்னுடைய தாயாரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

1 More update

Next Story