ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. பொன்னியின் செல்வன் படத்தின் 'ஆழ்வார்க்கடியான் நம்பி' போஸ்டர் வெளியீடு


ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. பொன்னியின் செல்வன் படத்தின் ஆழ்வார்க்கடியான் நம்பி போஸ்டர் வெளியீடு
x

பொன்னியின் செல்வன் படத்தின் ஆழ்வார்க்கடியான் நம்பி போஸ்டரை நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார்.

சென்னை:

சென்னை, கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. விரைவில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்து பல அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் 'ஆழ்வார்க்கடியான் நம்பி'போஸ்டரை நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார். அந்நாவலில் வந்தியத்தேவனாக வரும் கதாபாத்திரத்துடன் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரம் ஆழ்வார்கடியான் நம்பி. பொன்னியின் செல்வன் ரசிகர்களில் அதிகம் கவரப்பட்ட கதாபாத்திரம்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பதிவில், ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் ப்ளாக் (block) செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் (report) பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா. என குறிப்பிட்டுள்ளார்.


Next Story