ஆபாச தொடரில் நடித்ததாக எதிர்ப்பு... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா


ஆபாச தொடரில் நடித்ததாக எதிர்ப்பு... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா
x

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலியில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது ராணாவும் வெங்கடேசும் இணைந்து நடித்த 'ராணா நாயுடு' என்ற வெப் தொடர் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் அளவுக்கு மீறிய ஆபாசம் மற்றும் அருவெறுப்பான காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர்.

புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் இப்படி மோசமான தொடரில் நடிக்கலாமா என்றும் விமர்சித்தனர். இதையடுத்து ரசிகர்களிடம் ராணா மன்னிப்பு கேட்டு உள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த தொடரை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம். தனித்தனியாக பாருங்கள்'' என்று கூறியுள்ளார்.

எதிர்ப்பை மீறி இந்த வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story