முதல் தடவை இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர் சசிகுமார்


முதல் தடவை இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர் சசிகுமார்
x

நடிகர் சசிகுமார் முதல் தடவையாக இருமுடி கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.

சபரிமலை செல்வதற்காகவே கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் இருந்தார். அதோடு தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் நடந்த 'நந்தன்' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தும் வந்தார். இந்த நிலையில் நேற்று மதுரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சக அய்யப்ப பக்தர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக இருமுடி கட்டிக் கொண்டார். பின்னர் அங்கிருந்து சபரிமலை புறப்பட்டு சென்றார். அவருடன் நந்தன் பட டைரக்டர் இரா. சரவணன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். இந்த நிலையில் நந்தன் படத்தில் நடிப்பது குறித்து சசிகுமார் தெரிவித்த கருத்து ஒன்றை டைரக்டர் இரா. சரவணன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ''ஏண்டா இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டோம்னு பல நாள் வருத்தப்பட்டேன். கேரக்டரை உள்வாங்கவே முடியலை. வேற காட்சியை எடுக்க சொல்லிட்டு வந்து விட்டேன்.எதையும் கடந்துபோற பக்குவம் கொண்ட அந்த கேரக்டராக மாறிய பின்னால் பேய் பிடிச்ச மாதிரி இருந்தது'' என்று சசிகுமார் கூறியுள்ளார்.

1 More update

Next Story