விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய நடிகர் சிலம்பரசன்


விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய நடிகர் சிலம்பரசன்
x

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பலர் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத திரை பிரபலங்கள், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் சிலம்பரசன், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.


Next Story