நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்


நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்
x

கோப்புப்படம்

நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர்.

இதனைத்தொடர்ந்து வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் , நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர். அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம். எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story