நடிகை கியாரா அத்வானியை கரம்பிடித்த நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா...!

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் திருமணம் செய்துகொண்டனர்.
ஜெய்ப்பூர்,
இந்தி திரைத்துறையின் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானி. இருவரும் இணைந்து 2021-ம் ஆண்டு 'ஷேர்ஷா' படத்தில் நடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. நடிகை கியாரா அத்வானி 'எம்.எஸ். தோனி தி அண்டோல்டு ஸ்டோரி' படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இந்நிலையில், காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.
ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story