நடிக்க வந்தபோது காயப்படுத்தினர் -நடிகை அபர்ணதி


நடிக்க வந்தபோது காயப்படுத்தினர் -நடிகை அபர்ணதி
x

நடிக்க வந்தபோது காயப்படுத்தினர் என நடிகை அபர்ணதி தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரத்தா ஶ்ரீநாத், விதார்த் மற்றும் வளர்ந்து வரும் கதாநாயகியான அபர்ணதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'இறுகப்பற்று' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர்.

இதில் அபர்ணதி பங்கேற்று பேசும்போது, "இறுகப்பற்று படத்தில் நடித்ததற்காக எனக்கு நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன். படம் பார்த்தவர்கள் ஒரு குறையும் சொல்லவில்லை. நிறைய பேர் தங்கள் வாழ்க்கையில் இந்த கதை சம்பந்தப்பட்டு இருப்பதாக உணர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தப்படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர் என்று வடிவேலு சொன்னது போல் எனது வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது காயப்படுத்தினர். எனது தந்தையின் நண்பரின் மகன் நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்கப்போகிறாய் என்று சொன்னார்.

ஆனால் இப்போது அவர் துபாயில் இந்தப்படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி கிழித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நல்ல படத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. நான் பல படங்களில் நடித்தாலும் எதுவும் முழுமை கொடுக்கவில்லை.

இப்போதுதான் வெற்றியை பார்க்கிறேன். விக்ரம்பிரபு, விதார்த், ஸ்ரீ, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சானியா உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்''என்றார்.

1 More update

Next Story