ரசிகரால் தொல்லை அனுபவித்த நடிகை


ரசிகரால் தொல்லை அனுபவித்த நடிகை
x

நடிகை ரவீனா தாண்டன் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

தமிழில் சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் ரவீனா தாண்டன். தொடர்ந்து கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். இந்த நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை ரவீனா தாண்டன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்தபோது, என்னை பார்க்க வீட்டின் முன்னால் நிறைய ரசிகர்கள் காத்து இருப்பார்கள், அவர்களில் ஒரு ரசிகர் என்மீது பைத்தியமாகவே இருந்தார். ரத்தத்தினால் காதல் கடிதம் எழுதி அனுப்புவார். பரிசு பொருட்கள் அனுப்புவார். நிர்வாண படங்கள், வீடியோக்களையும் கொரியரில் அனுப்பிவைப்பார். எங்கள் வீட்டு கேட் அருகில் மணிக்கணக்காக காத்து நிற்பார். ஒருநாள் குடும்பத்தினருடன் வெளியே செல்லும்போது காரை நிறுத்தாததால் கார் மீது கல் வீசினார். உடனே நான் போலீசில் புகார் செய்தேன். அதை இப்போது நினைத்தாலும் பயம் வருகிறது" என்றார்.


Next Story