நடிகை மீனா குமாரி வாழ்க்கை படமாகிறது


நடிகை மீனா குமாரி வாழ்க்கை படமாகிறது
x

மறைந்த நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாக வந்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா வாழ்க்கை கதையும் தலைவி என்ற பெயரில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்தது.

இந்த நிலையில் மறைந்த பழம்பெரும் இந்தி நடிகை மீனா குமாரி வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இந்த படத்தை சிவாஜி, எந்திரன், புலி உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய மும்பையை சேர்ந்த மனீஷ் மல்கோத்ரா டைரக்டு செய்கிறார்.

மீனாகுமாரி இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மீனா குமாரி நடித்த பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற படங்களை இன்றைய தலைமுறையினரும் விரும்பி பார்க்கிறார்கள். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். படத்தில் மீனாகுமாரி வேடத்தில் கிருத்தி சனோன் நடிக்கிறார். இவர் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக வந்தார்.

1 More update

Next Story