வலைத்தள அவதூறுக்கு நடிகை நீலிமா பதிலடி


வலைத்தள அவதூறுக்கு நடிகை நீலிமா பதிலடி
x

வலைத்தளத்தில் அவதூறான வார்த்தைகளுடன் இழிவாக பேசி பதிவுகள் வெளியிட்டவர்களுக்கு நீலிமா ராணி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழில் 'பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நீலிமா ராணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். அதில் தனது புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி அதில் பகிர்ந்து வருகிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் நீலிமா ராணியை அவதூறான வார்த்தைகளுடன் இழிவாக பேசி பதிவுகள் வெளியிட்டுள்ளனர். இதனால் கோபமான நீலிமா தன்னையும், தனது குடும்பத்தினரையும் மோசமாக விமர்சித்தவர்களை பிளாக் செய்து அவர்களின் பெயர்களை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் நீலிமா வெளியிட்டுள்ள பதிவில், ''என்னை சுற்றி எதிர்மறையான நபர்கள் நிறைய உள்ளனர் என்று தெரியும். இவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும் என்பதையும் நான் அறிவேன். அவர்களை 'பிளாக்' செய்து விட்டேன். அந்த நபர்களின் ஆத்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். சரியான பதிலடி கொடுத்தீர்கள் என்று அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story