அவதூறால் கடுப்பான நடிகை பூஜா ஹெக்டே


அவதூறால் கடுப்பான நடிகை பூஜா ஹெக்டே
x

மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என்று ஒருவர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார்

தமிழில் 'முகமூடி' படத்தில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்து அடுத்தடுத்து திரைக்கு வந்த 4 படங்கள் தோல்வி அடைந்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்தது.

முதலில் பிரபாசுடன் நடித்த 'ராதே ஷியாம்' தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சிவியுடன் நடித்த 'ஆச்சார்யா' படமும் நஷ்டமானது. அடுத்து வந்த சர்க்கஸ் இந்தி படமும் ஓடவில்லை. மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க இருந்த தெலுங்கு படமும் கைவிட்டு போனது.

இதனால் பூஜா ஹெக்டேவை முன்னணி கதாநாயகர்கள் ஓரம்கட்டுகிறார்கள் என்றும், அவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என்றும், குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார்.

இதனால் கோபமான பூஜா ஹெக்டே வலைத்தளத்தில் தன்னைப்பற்றி அவதூறு பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

1 More update

Next Story