நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை


நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை
x

தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, கொடைக்கானல், ஆடுபுலி, வித்தகன், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்து இருந்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார்.

கேரளாவை சேர்ந்தவரான பூர்ணா கடந்த வருடம் துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பூர்ணா கர்ப்பமானார். கர்ப்ப காலத்தில் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். கடந்த மாதம் நடந்த வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் பூர்ணாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பூர்ணா கையில் ஏந்தியபடி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story