தவறாக பேசியவர்களை கோபத்தில் அடித்த நடிகை ரெஜினா


தவறாக பேசியவர்களை கோபத்தில் அடித்த நடிகை ரெஜினா
x

என்னை தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்து இருக்கிறேன் என நடிகை ரெஜினா கசாண்ட்ரா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ரெஜினா அடிக்கடி மற்றவர்கள் மீது கோபப்படுவதாகவும் சிலரை அடிக்க பாய்ந்துள்ளார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சர்ச்சை குறித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், ''தைரியம் என்பது எங்கோ வெளியே இருந்து எடுத்துக் கொண்டு வருவது அல்ல. அது நமக்குள்ளேயே இருக்கிறது என்ற விஷயம் எனக்கு பள்ளி நாட்களிலேயே புரிந்துவிட்டது.

இப்போதும் நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. எனக்கு கோபம் வந்தால் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. பள்ளி நாட்களில் மட்டும் இன்றி கல்லூரியிலும், சினிமா துறைக்கு வந்த பிறகும் என்னை தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்து இருக்கிறேன். எனது கோபத்திற்கு பின்னால் அகம்பாவம் இருக்காது. காரணம் இருக்கும்" என்றார்.

1 More update

Next Story